Science, asked by sureshsuresh5795787, 1 month ago

செல்லின் உள் குளுக்கோஸ் சிதைவடைதலின் முதல் படி one ward​

Answers

Answered by gyaneshwarsingh882
1

Answer:

Explanation:

குளுக்கோசு அல்லது குளுக்கோஸ் (Glucose, C6H12O6) என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது சர்க்கரை ஆகும். இது ஓர் (ஒற்றை சாக்கரைடு) வகைகளில் ஒன்று. குளுக்கோசு உயிரியலில் முக்கியமான ஒரு கார்போ ஐதரேட்டாக உள்ளது. உயிரணுக்கள் இதனை ஆற்றல் தரும் ஒரு அடிப்பொருளாகவும் வளர்சிதைமாற்றத்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன. குளுக்கோசு ஒளிச்சேர்க்கையின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் (தரசம்) மற்றும் செல்லுலோசு ஆகிய பாலிமர்கள் உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் குளுகசு (γλυκύς) என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் இனிப்பு என்பதாகும். ஓசு (-ose) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.

குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி எதிர் உருவ (பிம்ப) குடும்பங்களாக (இரட்டை ஐசோமெர்கள்) பிரிக்கலாம். டி-குளுக்கோசு என்று குறிக்கப்படும் குளுக்கோசின் வலக் கை வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோசு என்கிற சொல் டெக்ஸ்ட்ரோரொடேடரி குளுக்கோஸ் (dextrorotatory glucose) என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.[1]. டெக்ஸ்ட்ரோசு கரைசல்கள் முனைநிறுத்திய ஒளியை (polarized light) வலப்புறமாக சுழற்றுகின்றன (இலத்தீன் மொழியில் டெக்ஃச்ட்டர் (dexter) என்றால் வலது). இந்தக் கட்டுரை டி-குளுகோசைப்பற்றியது. இந்த மூலக்கூறின் கண்ணாடி எதிருருவமான (பிம்பமான) இடது குளுகோசு தனியாக விளக்கப்படுகின்றது.

கட்டமைப்பு

குளுக்கோசு எளிய இனியம் (அதாவது ஒற்றை இனியம் அல்லது ஒற்றை சாக்கரைடு) என்று அழைக்கப்பட்டாலும், அது ஒரு சிக்கலான மூலக்கூறு அமைப்பு ஆகும். ஏனெனில் இது பல்வேறு உள்ளமைப்புகளைக் கொண்டிருக்கிறது. கரைசல்களில் சிறு அளவுகளில் மட்டுமே இருக்கக் கூடிய வளையமிலா ஐசோமரின் பொருளில் மட்டுமே இந்த அமைப்புகள் விளக்கப்படுகின்றன.

குளுக்கோசு ஆறு கார்பன் அணுக்களின் சங்கிலி ஒரு ஆல்டிஃகைடு குழுவில் முடியும் அமைப்பு கொண்ட ஃகெக்சானலில்(Hexanal) இருந்து தருவிக்கப்படுகிறது. மற்ற ஐந்து கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் ஆல்க்ககால் குழுக்களைத் தாங்கியுள்ளன. குளுக்கோசு ஓ ஆல்டோ ஃகெக்சோசு என்று அழைக்கப்படுகிறது. கரைசல்களில், குளுக்கோசு முதன்மையாக ஒரு ஆறு உறுப்பினர் வளையமாகவே இருக்கிறது. ஆறு ஐட்ராக்சி குழு மற்றும் ஆல்டிஃகைடின் வேதிவினையில் இருந்து தோன்றும் ஒரு ஃகெமியாசெடல் குழுவை இந்த வளையம் கொண்டிருக்கிறது. ஐந்து கார்பன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் கொண்ட இந்த வளையம் பைரான் தருவிப்பு ஆகும். குளுக்கோசின் இந்த வளைய வடிவம் குளுக்கோபைரனோசு என்று அழைக்கப்படுகிறது.

C-1 மீது அமைந்திருக்கும் சமச்சீரற்ற மையம் அனோமெரிக் கார்பன் அணு என அழைக்கப்படுகிறது. வளைய முடிவு நிகழ்முறையானது இரண்டு ஐசோமெர்களை உருவாக்கக் கூடும். இவை அனோமர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை α-குளுக்கோஸ் மற்றும் β-குளுக்கோஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன. ஹைட்ராக்சில் குழுவின் இடநிலையைப் பொறுத்தளவில் இந்த அனோமெர்களுக்கு இடையே வித்தியாசம் உண்டு. டி-குளுக்கோஸ் ஹவோர்த் நீட்சியாக பெறப்படுகையில் α என்கிற குறியீடு, C-1 க்கு இணைக்கப்பட்டிருக்கும் ஹைட்ராக்சில் குழுவானது -CH2OH க்கு மாறுபக்கத்தில் C-5 -ல் அமையப் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கிறது. α மற்றும் β ஆகியவற்றிற்கு இடையே வித்தியாசம் காண்பதற்கான இன்னொரு துல்லியமற்ற வழி C-1 ஹைட்ராக்சில் வளையத்தின் தளத்திற்கு மேலே அமைந்திருக்கிறதா அல்லது கீழே அமைந்திருக்கிறதா என்பதைக் காண்பதாகும். ஒரு நீர்மக் கரைசலில் α மற்றும் β குறிப்பிட்ட மணி நேரங்களில் α:β 36:64 என்கிற நிலையான ஸ்திரமான விகிதத்திற்கு இடைமாற்றிக் கொள்ளும். இந்த நிகழ்முறைக்கு மாற்றுசுழற்சி என்று பெயர்.[2] அனொமெரிக் விளைவின் தாக்கம் இல்லாதிருந்தால் இந்த விகிதாச்சாரம் α:β 11:89 என்பதாய் இருக்கும்.

Attachments:
Similar questions