நெப்ரானின் சுரத்தலுக்கான பகுதி எது? அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேணும் பகுதி எது?
Answers
Answered by
0
சேகரிப்பு நாளம்
- நெப்ரானின் சுரத்தலுக்கான பகுதி சேகரிப்பு நாளம் ஆகும்.
சேய்மை சுருள் நுண்குழல்
- சேய்மை சுருள் நுண்குழல் ஆனது நீரை மீள எடுத்து குழலுக்குள் பொட்டாசியத்தினை சுரக்கிறது.
- எனவே சேய்மை சுருள் நுண்குழல் திரவத்தில் நீர், சோடியம் மற்றும் குளோரைடு முதலியன எஞ்சியுள்ளன.
- இங்கு ஹார்மோன்கள் உடலின் தேவையின் அடிப்படையில் பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதை நெறிப்படுத்துகிறது.
- இரத்தத்தின் pHஐ நெறிப்படுத்த பைகார்பனேட்கள் மீள உறிஞ்சப்படுகின்றன.
- இங்கு இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவுகளின் நிலைத்தன்மை நெறிப்படுத்தபடுகிறது.
- நீர் சேகரிப்பு நாளத்தின் வழியே ஊடுருவிச் செல்கிறது.
- செயல்மிகு கடத்தல் மூலம் பொட்டாசியம் அயனிகள் குழலினுள் செல்கின்றன.
- சோடியம் மீள உறிஞ்சப்படுகிறது.
- இதனால் அடர்த்தி மிக்க சிறுநீர் உருவாகிறது.
- அக்குவாபோரின்கள் இதன் சுவர் வழியே நீர் உட்செல்ல உதவுகிறது.
- சவ்வுவழி பொருட்களை கடத்தும் புரதமே அக்குவாபோரின்கள் ஆகும்.
- இவை நீரினை ஊடுருவ அனுமதிக்கும் கால்வாய்கள் ஆகும்.
Attachments:
Similar questions