Puthu kavithai katturai in tamil for assignment maximum 10 pages
Answers
Answer:
ண்டைக் காலம் தொட்டு இன்று வரை தமிழ் கவிதை பற்பல பரிணாமங்களை அடைந்து வந்துள்ளது. சங்க காலம் முதல் மரபுக் கவிதை தமிழில் பா இலக்கணத்தை சார்ந்து இயற்றப்பட்டது. காலப் போக்கில் புதுக் கவிதை மரபு இலக்கணத்தை சாராது தனக்கே உரிய புதிய பாணியில் இயற்றப்பட்டது. இந்தக் கட்டுரையில் மரபுக் கவிதை புதுக்கவிதையாக மாறிய வரலாறைக் காண்போம்.
புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
புதுக்கவிதையின் தோற்றம்
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதை மகாகவி சுப்ரமணிய பாரதியை வெகுவாகக் கவர்ந்தது. இந்தக் கவிதையினால் உந்தப் பட்டு தானும் தமிழில் புதுக் கவிதையைப் படைக்க வேண்டும் என பாரதி எண்ணினார். அவருக்கே உரிய பாணியில் பாரதியார் படைத்த கவிதைகளை ‘வசனக் கவிதைகள்’ என்று வகைப் படுத்தி வெளியிட்டார். இந்த வகையில் பாரதி இயற்றிய முதல் புதுக் கவிதைக்கு ‘காட்சிகள்’ என்று அவர் பெயரிட்டார். பாரதி காட்டிய வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் போன்ற கவிஞர்கள் புதுக் கவிதையை வளர்த்தனர்.
தமிழில் புதுக் கவிதையின் வளர்ச்சியை நாம் மூன்று காலங்களாகப் பிரிக்கலாம். அவை மணிக் கொடிக் காலம், எழுத்துக் காலம் மற்றும் வானம்பாடிக் காலம் ஆகியனவாகும். இந்தக் காலகட்டங்களில் வெளிவந்த தமிழ் இதழ்கள் புதுக்கவிதைக்குப் பொலிவூட்டின.