sarpayagam en ezhuthukal essay in tamil
Answers
Explanation:
jdkdkdkdkfmdmdkdkmdmdkdmfskks..s.jssmkd தயவு செய்து
சார்பெழுத்து:
தமிழ் இலக்கணத்தில் இன்னும் விளங்காத அல்லது தெளிவாக விளக்கிக் கூறமுடியாத பகுதிகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் சார்பெழுத்து. "சார்பெழுத்து என்றால் என்ன?" என்ற வினாவிற்கு மிக எளிதாகச் "சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள்" என்று கூறுவர் இன்றைய மாணவர் பலரும். "சார்ந்துவருதல் என்றால் என்ன?" என்று வினவினால் "தனித்தியங்காதன" என்று பதில் கூறுவர்.
"தனித்தியங்குதல் என்றால் என்ன? என்று வினா எழுப்பினால் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிப்பர். ஏன் இந்த நிலை? வழிவழியாக ஆசிரியர்கள் கூறிய தொடர்களையே - பொருள் புரியாமலேயே - மனனம் செய்து ஒப்புவித்ததன் பயனே இதற்குக் காரணம் எனலாம்.
"சார்பெழுத்து என்றால் என்ன?" என்ற வினாவிற்குச் சில மாணவர்கள் "முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் ஆகும்" என்று பதில் கூறுவர். இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது.