India Languages, asked by rameeha, 1 year ago

Speech on topic environment in tamil

Answers

Answered by Anonymous
1

Answer:

ஒட்டுமொத்தமாய் இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று கருதப்படுகிறது. அண்டத்தின் இயற்பியல் என்ற சொல் பல்வேறு வகைகளில் விரிவான பொருள்களைக் கொண்டது ஆகும். இவையாவும் படிப்படியாக வளர்ந்து நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று அழியாமல் நிலைத்திருக்கின்றன. கடந்த பல நூற்றாண்டுகளில் நவீன அறிவியல் முறைகளிலும் அண்டத்தின் இயற்பியல் என்ற பொருளின் பயன்பாடு அதிகரித்தவண்னம் உள்ளது. நேச்சர் என்ற சொல்லின் பல்வேறு பயன்பாடுகளுக்கு மத்தியில் இச்சொல்லின் பொருள் பெரும்பாலும் நிலவியல் மற்றும் வனவியல் என்ற பொருள்களையும் குறிப்பதாக உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் பொது உலகத்தை இயற்கை என்ற சொல் குறிப்பதாகவும் கருதலாம். மற்றும் சில சந்தர்ப்பங்களில் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புடைய செயல்முறைகளுக்கு, அதாவது புவியின் வெப்பநிலை மற்றும் நிலவியல் போன்றவற்றுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வகை பொருட்கள் எவ்வாறு நிலைபெறுகின்றன மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப எவ்வாறு அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பது தொடர்பான கருத்துகளையும் உள்ளடக்கியதாக இயற்கை பொருள் கொள்ளப்படுகிறது.

இது பெரும்பாலும் "இயற்கைச் சூழல்" அல்லது வனாந்தர-காட்டு விலங்குகள், பாறைகள், காடு என்ற பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மனித இடையீட்டினால் மிகுதியாக மாற்றியமைக்கப்படாத பகுதி என்றும், அல்லது அந்தப்பகுதிகளில் மனித தலையீடு நிகழாத பகுதியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. . உதாரணமாக, உற்பத்தி பொருள்களும் மனித தொடர்புகளும் பொதுவாக இயற்கையின் பகுதியாக கருதப்படுவதில்லை. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. இயற்கை மற்றும் செயற்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பண்டைய காலம் முதல் இன்றுவரை இயற்கை புரிந்து கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்.

hi bro tamil ah? endha class?

Similar questions