Tamil essay writing examples
Answers
Explanation:
ஒருமாது தன்றுணைவன் சீடனைமற் றொருமாதவ்
..வும்பர் கோனை
ஒருமாது சோதரரை வரைச்சேர்ந்து கன்னியரென்
..றுயர்பேர் கொண்டார்
அருமையாவெ மைச்சேயர் சோதரர்சீ டரையிம்பர்க்
..கரசைச் சேரும்
பொருண்மாதக் கன்னியர்க்கெ லாஞ்சிரோ,மா மணியென்னப்
..புகல லாமே. 26
– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
முன்னாளில் தாரை என்பவள் வியாழன் மனைவி. அவள் வியாழனின் மாணாக்கனான திங்களைக் கரவிற் கூடிப் புதனைப் பெற்றாள்.
கவுதமர் மனைவி அகலியை வானவர்க் கோனைக் கூடினள்.
பாஞ்சாலன் மகளாகிய துரோபதை, பாண்டுவின் மக்களான தருமன் முதலிய உடன்பிறந்தார் ஐவரையும் கூடினள்.
இவர்கள் மூவரும் கற்புடைய கன்னியரெனப் புகழப்படுகின்றனர்.
இவ் விலைமாதோ நம்மை, நம் மக்களை, நம் உடன் பிறந்தாரை, நம் மாணாக்கர்களை, உலகாள் வேந்தரை ஓவாது கூடினள். ஆயின் இவள் அம் மூவர்க்கும் தலைமணி போன்றவளாவள்.
துணைவன் - கணவன். சீடன் - மாணாக்கன். சோதரர் - உடன்பிறந்தார்...