Biology, asked by Naveen802, 10 months ago

ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.

tell me fast i want

i make y as brianliest​

Answers

Answered by bakanmanibalamudha
17

Explanation:

அன்புள்ள ..................

சென்ற வாரம் எங்கள் ஊர் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா – நானும் அப்பாவும் சென்று வந்தோம். சித்திரை பிறப்பை தொடர்ந்து வரும் முதல் ஞாயிறு காப்பு கட்டி 15 நாட்கள் மண்டகப்படி செய்து காப்பு கட்டியதிலிருந்து வரும் மூன்றாவது ஞாயிறு திருவிழா. தொடர்ந்து இரண்டு நாள் நாடகத்துக்கு பின் புதன் காலை காப்பறுத்து நிறைவு.

காவடி, பால்குடம், மாவிளக்கு

ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோயில் குளத்தருகே காவடி கட்டி, பால்குடம் எடுத்து வருவார்கள். யாராவது ஒருவர் அலகு குத்தி காவடி எடுக்க காவடி வரும் வழியில் உள்ள வீடுகளில் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள். அங்கங்கே மாவிளக்கு தட்டுடன் பெண்கள் சேர்ந்து கொள்ள முதலில் காவடி பால்குடங்களில் உள்ள பால் அபிஷேகத்துக்கு பின் மாவிளக்கு ஏற்றுவார்கள்.

மாலையில் மஞ்சள் தண்ணி விளையாட்டு. வீட்டுக்கொருவர் மஞ்சள் தண்ணி, வேப்பிலை மிதக்க, கொண்டு செல்லவேண்டும். அதை எங்கள் வயல்களில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் ஊற்றி விளையாட வேண்டும் என்பது வழக்கம். மாரியம்மன் தாழ்த்தப்பட்ட இன பெண் என்றும் அதனால் அவள் சார்ந்த குலத்தவரிடம் இணக்கமாக இருப்பது அவளுடைய அருளுக்கு வழி வகுக்கும் என்றும் ஒரு நம்பிக்கை. ஆரம்ப காலங்களில் அவர்கள் கோயிலுக்குள் வந்து வழிபட்டதில்லை. அப்பா சித்தப்பா மற்றும் சிலரின் பெரு முயற்சிக்கு பின் இப்போது அவர்களும் உள்ளே வந்து வழிபடுகிறார்கள்.

என்னுடைய சிறுவயதில் நான் பார்த்தது ஊர் குளங்கள் ஏலத்துக்கு விடப்பட்டு ஏல தொகை திருவிழா செலவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மிதமான வரியும் நிலம் வைத்திருக்கும் அளவுக்கு ஏற்ப – திருவிழா செலவு என்பது கோயில் அய்யர், தப்பு அடித்து கொம்பு ஊதுபவர்கள், சாமி தூக்கும் போது நெய் பந்தம் பிடிக்கும் வண்ணான், ஆசாரி, மஞ்சள் நீர் விளையாட்டு, மற்ற வேலைகளை பகிர்ந்து கொள்ளும் தாழ்த்தப்பட்டவர்களின் சம்பளம், கரகாட்ட, நாடகம் போடுபவர்களுக்கான சம்பளம் ஆகியவை.

குளங்கள் ஊர் பஞ்சாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், வரி மட்டுமே நிதி ஆதாரம். எங்களுடையது ரொம்ப சின்ன கிராமம். ஆரம்ப காலங்களில் மண்டகபடி செய்யும் வசதியுடன் இருந்த குடும்பங்கள் கொஞ்சமே. இப்போது நிறைய பேர் வெளிநாட்டில் இருப்பதால் தாரளமாக செய்கிறார்கள். தம்மை நிறுவி கொள்கிறார்கள். ஆடல் பாடல் என்ற பெயரில் திரை நடனங்கள் நடக்கிறது. இல்லையென்றால் திரைப்படங்கள் உலக தொலைகாட்சியில் முதல் முறையாக. அப்பா சித்தப்பா கொஞ்சம் பெரிசுகள் இருக்கும் வரை அத்து மீறல் இருக்காது.

ஆனால் ஒன்று என்னுடைய சிறுவயதில் காலையில் முருகன் வேடமிட்டவர் பணம் வாங்க வரும்போது நல்ல நரைத்த தலையில் சாயமடித்து வந்து நிற்பார். காலையில் பார்க்கும் வள்ளியின் முகம் வேறு மாதிரி இருக்கும்.

முன்பு கோயிலாக இருந்தது ஓடு வேய்ந்த கோயில். இப்போது கான்க்ரீட் கட்டிடம். ஊர் மக்களின் பணத்தில். கோயிலில் மூல விக்ரகம் நிறுவும்போது போடும் நவரத்தினங்கள் உபயம் ஏதோ ஒரு கழக ஆட்சியில் ஆயிரம் கரங்கள் நீட்டி காசு பார்த்து, காவல் துறையால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு குடும்பம். என்னுடைய சொந்தமும் கூடத்தான். நாய் விற்ற காசு.

காப்பறுத்த அன்று மாலை வரவு செலவு கணக்கு ஊரார் மத்தியில் கொடுக்கப்படும். தண்ணி அடித்து விட்டு ”அந்த தப்புலயும் கொம்புலயும் என்னோட ஒரு ரூபா இருக்கு.” என்று சலம்பும் இளவட்டங்கள். அவர்களை சத்தம் போட்டோ, தலையில் இரண்டு போட்டோ அடக்கும் பெரிசுகள். உங்கள் பதிவு தொடர்ந்த நினைவுகளை கொண்டு வந்து விட்டது.

Please mark my answer as Brainliest..

Answered by susendharRJ
2

Answer:

அன்பார்ந்த கோட்டை மாரியம்மன் பக்தகோடிகளே!

இந்தாண்டு ஸ்ரீஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 11ஆம் நாள் திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் மாசிப் பெருவிழா நடைபெறும். அப்பொழுது கீழ்க்குறித்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தகோடிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

நிர்வாகக் குழுவினர்,

ஸ்ரீ அ/மி கோட்டை மாரியம்மன்

மாசிப் பெருவிழாக் குழுவினர்

திண்டுக்கல்

mark as a brianliest Plz pandurang bro

Similar questions