மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துக்கள் யாவை ? விளக்குக
Answers
முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு [2] என்பதில் உள்ள முதல் என்பதும் இதே பொருளைக் கொண்டது. இது கால முதன்மை கொண்ட மூலதனம்.
மொழிமுதல் எழுத்து என்பதில் உள்ள முதல் இட முதன்மையைக் காட்டும். முதலில் நிற்கிறான். அகர முதல எழுத்தெல்லாம் [2] என்பனவற்றிலுள்ள முதல் போன்றது. இது இட முதன்மை.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு என்னும் இரண்டாவது இயலில் கூறப்படும் செய்திகளில் மொழிமுதல் எழுத்துகள் பற்றிய செய்தியும் ஒன்று.
பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது. தமிழ் சொற்களில் முதலில் வரும் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. அவை என்பது இங்குக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புணர்ச்சியில் எந்த எழுத்து வரும்போது என்ன நிகழும் என்று காணமுடியும்.