India Languages, asked by tamilhelp, 1 year ago

நோயின் பெயர்: டிக்கா இலைப்புள்ளி நோய் (TIKKA DISEASE)

Answers

Answered by priyajha96
1

wow Inna tough language xd

Answered by anjalin
1
  • நோயுயிரியின் பெயர் : செர்கோஸ்போரா பெர்சனேடா எனும் பூஞ்சை இந்த நோயினை தோற்றுவிக்கிறது.
  • வகைப்பாட்டு நிலை: இந்த பூஞ்சை டியூடரோமைசீட்ஸ் என்ற வகுப்பைச் சார்ந்தது.

நோயின் அறிகுறிகள்:

  • தாவரங்களின் பெரும்பாலான நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகிறது.
  • குறைந்தது இரண்டு மாத வயது உள்ளபோது தாவரத்தின் இலைகளில் நோய்த்திட்டுக்கள் புள்ளிகளாக தோன்றுகின்றன.  
  • நோயினால் பாதிக்கப்பட்ட இலையின் பகுதிகள், புள்ளிகளாக வட்ட வடிவில், 1 லிருந்து 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டுள்ளன.
  • இந்த புள்ளிகள் ஆழந்த பழுப்பு அல்லது கருநிறத்தில் இலையின் இரு பரப்புகளிலும் உள்ளன.  
  • ஒவ்வொரு இலைப்புள்ளியையும் சூழ்ந்து வட்டமான மஞ்சள் நிறப்பகுதி உருவாகிறது.

நோயுயிரி:

  • செர்கோஸ்போரா பெர்சடேனாவின் மைசீலியம் பழுப்பு நிறமுடையது.
  • குறுக்குச் சுவரைக் கொண்டது, கிளைத்தது, மெல்லியது, ஓம்புயிர் செல்களிலிருந்து ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்ள கிளைத்த ஹாஸ்டோரியங்கள் உருவாகின்றன.
  • கொனிடியங்கள் நீளமானவை, குறுக்குச் சுவர்களை உடையவை.
  • கோனிடியத் தாங்கி ஒவ்வொன்றும் ஒரு கொனிடியத்தைத் தோற்றுவிக்கிறது.
  • கோனிடியங்கள் காற்றினால் எடுத்து செல்லப்பட்டு நோயானது பரவுகிறது.

தடுப்பு முறைகள்:

  • ஆதாரத் தாவரம் வளரும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட தாவரங்கள், நோய் உண்டாக்கும் பூஞ்சை வாழும் தாவரகழிவுகள் ஆகியவை இல்லாதிருத்தல் வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறை, பாஸ்பெடிக் மற்றும் பொட்டாசிய உரங்களை பயன்படுத்துவது நோயை குறைக்கிறது.
  • கந்தக தூளை தூவுவதும் நல்ல பலன்களை தரக்கூடியது.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட விதைகளை விதைக்க வேண்டும்.

Similar questions