புதைபடிவ எரிபொருள் என்று குறிப்பிடப்படும் எரிபொருள் எது *
நிலக்கரி
பெட்ரோல்
டீசல்
அனைத்தும் சரி
urgent
Answers
Explanation:
புதைபடிவ எரிமங்கள் (Fossil fuels) இறந்து புதைந்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை நிகழ்வுகளால் புவிக்கடியில் தோன்றிய எரிமங்களாகும். இவை பண்டைய ஒளிச்சேர்க்கை ஆற்றலைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன.[1] உயிரிகளின் அகவையும் விளையும் எரிமங்களின் ஆயுளும் பல மில்லியன் ஆண்டுகளாகும். சிலவேளைகளில் இது 650 மில்லியன் ஆண்டுகளினும் கூதலாகவும் அமையலாம்.[2] இந்தவகை எரிமங்களில் கரிமத்தின் அளவு கூடுதலாக அமையும். இவற்ரில் பாறைநெய் அல்லது கல்நெய், நிலக்கரி, இயற்கை வளிமம் ஆகியன அடங்கும்.[3] பொதுவாக இவற்றில் இருந்து பெறப்படும் கொணர்வுப் பொருள்களாக கெரோசின் புரோப்பேன் ஆகியன அடங்கும். புதைபடிவ எரிமங்களில் ஆவியாகும் பொருள்களும் ஆவியாகாத பொருள்களும் அடங்கும். ஆவியாகும் பொருள்களில் மீத்தேன் போன்ற தாழ் கரிம-நீரக விகிதம் உள்ள பொருள்களும் பாறைநெய் போன்ற நீர்மங்களும் அடங்கும். ஆவியாகாத பொருள்களில் பெரிதும் கரிமமே அடங்கியிருக்கும். இவற்றில் நிலக்கரி வகைகள் அடங்கும். நீரியக்கரிம வயல்களில் மீத்தேன் தனியாகவோ எண்ணெயுடன் கலந்தோ மீத்தேன் கிளத்திரேட்டுகளாகவோ கிடைக்கிறது.  புதைபடிவ எரிமங்களில் ஒன்றாகிய நிலக்கரி இறந்த நிலைத்திணை (தாவர) எச்சங்களில் இருந்து புதைபடிவ எரிமங்கள்[4] முன்னவை புவி மேலோட்டில் உயர் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆட்பட்டபோது உருவாகியது எனும் கோட்பாட்டை[5] முதலில் 1556 இல் கியார்கியசு அகிரிகோலாவும் 18 ஆம் நூற்றாண்டில் மிகயீல் இலமனசொவ்வும் வெளியிட்டனர். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தோற்றம் (abiogenic theory) என்று வழங்கப்படும் ஒரு கோட்பாடும் உண்டு. இயற்கை வளிமம் போன்ற எளிதில் ஆவியாகும் நீரியக்கரிமங்கள் எந்தவொரு உயிரிப் பொருளோடும் தொடர்பில்லாமல் உருவானவை என்று இக்கண்ணோட்டம் கூறுகிறது. 2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான ஆற்றல் மூலங்களில் 86% புதைபடிவ எரிமங்களில் இருந்து பெறப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 6.3% நீர் மின் ஆற்றலாகவும், 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன. ஆற்றல் தகவல் ஆட்சியகம் 2007 இல் முதன்மை ஆற்றல் வாயில்களாக 36.0% பாரைநெய்யும் 27.4% நிலக்கரியும் 23.0% இயற்கை வளிமமும் அமைவதாக மதிப்பிட்டுள்ளது. எனவே மொத்த உலக முதன்மை ஆற்றல் நுகர்வில் புதைபடிவ எரிமங்கள் மட்டுமே 86.4% பங்கினதாக அமைகிறது.[6] புதைபடிவமற்ற ஆற்றல் வாயில்களாக, 2006 இல் 8.5% அணுமின் ஆற்றலும் 6.3% நீர்மின்சாரமும் மற்ற 0.9% அளவு ஆற்றலாக புவி வெப்ப ஆற்றலும் சூரிய ஆற்றலும் கடலோத ஆற்றலும் காற்றின் ஆற்றலும் விறகு ஆற்றலும் கூள ஆற்றலும் அமைகின்றன.[7] உலக ஆற்றல் நுகர்வு ஓராண்டுக்கு 2.3% வீதத்தில் வளர்ந்துவருகிறது. புதைபடிவ எரிமங்கள் இயற்கையில் தொடர்ந்து உருவாகினாலும் இவை புதுப்பிக்கவியலா வாயிகளாகவே கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உருவாக பலமில்லியன் ஆண்டுகள் தேவைப்படுவதாலும் அற்ந்த வளங்களின் பயன்வீதம் உருவாகும் வீத அளவை விட மிக்க் குறைவாக அமைவதாலும் எனலாம்.[8][9] புதைபடிவ எரிமங்கள் புதுப்பிக்க முடியாதவை. அவை உருவாகப் பல்லாயிரம் ஆண்டுக்காலம் தேவைப்படும். இந்த வளங்கள் உருவாகும் வேகத்தை விட அவற்றைப் பயன்படுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால், கால ஓட்டத்தில் இவ்வளம் குன்றி வருகிறது. பிற இயற்கைச் சூழல் சார்ந்த சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன. அதோடு பல வட்டார, உலகப் சிக்கல்களும் இந்த வளங்களைச் சார்ந்து ஏற்படுகின்றன. உலக எரிபொருள் தேவை பெருகப் பெருக, புதுப்பிக்கும் முறையிலான ஆற்றலை நோக்கிய தேடல்கள் தொடர்கின்றன. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஒரு ஆண்டில் உலக அளவில் 21.3 பில்லியன் டன்கள் கரியீராக்சைடு(கார்பன் டை-ஆக்சைடு) வளிமம் வெளியேற்றப் படுகிறது என்று கணிக்கப் பட்டுள்ளது. இயற்கைச் செலுத்தங்களால் அதில் பாதியை மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சூழலில் கரியமில வளிம அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பசுங்குடில் வளிமங்களில் ஒன்று என்பதால், புவி வெப்ப ஏற்றத்திற்கும் (global warming) இது காரணமாக அமைகிறது.