India Languages, asked by pranavika23, 9 months ago

பொதுக்கட்டுரை : தாய்மொழிப் பற்று.Urgent please answer...

Answers

Answered by Anonymous
2

Answer:

அனைவருக்கும் தாய்மொழி உண்டு. அது தான் நாம் பேசும் மொழியாக இருக்கும். 'தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'. தாய்மொழியைக் கற்பதும், அதை பிழையில்லாமல் பேசுவதும், எழுதுவதும் அவசியம். தாய்மொழிப் பற்று ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். பிற மொழிகளைக் கற்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். பல மொழிகளைக் கற்றாலும், தாய்மொழியையும் நாம் ஆர்வத்துடன் பயில வேண்டும். உங்களுக்கு தாய்மொழிப் பற்று எந்த அளவு இருக்கிறது என்பதை, எளிய வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு தாய்மொழிப் பற்று எவ்வளவு உண்டு என்பதற்கான பதிலை அறிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்று தான் கேட்கிறோம்).

உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.

1) பேருந்து, சிற்றுந்து போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா?

அ) பேச்சு வழக்கில் பயன்படுத்துவதில்லை. ஆனால் கேட்கும்போது, இனிமையாக இருக்கிறது.

ஆ) இதையெல்லாம் பயன்படுத்தினால், என்னை மனநலம் சரியில்லாதவன் என்பார்கள்.

இ) பயன்படுத்துவேன்.

2) எந்த மொழியின் மூலம் (மீடியம்) படிக்கிறீர்கள்?

அ) தமிழ். நான் பிடிவாதம் பிடித்து இதைத் தேர்ந்தெடுத்தேன்.

ஆ) தமிழ். ஆங்கில மீடியத்தில் இடம் கிடைக்கவில்லை.

இ) ஆங்கிலம்

3) தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பிற மாணவர்களுடன் பேசும்போது, பெரும்பாலும் எந்த மொழியில் பேசுவீர்கள்?

அ) தமிழ்

ஆ) தமிழும் ஆங்கிலமும் கலந்த தங்கிலீஷ்!

இ) பெரும்பாலும் ஆங்கிலம்

4) பாரதியார், வள்ளுவர், அவ்வையார் இவர்களைத் தவிர, சில தமிழ்ப் புலவர்களின் பெயரைக் கூற முடியுமா?

அ) நிச்சயம் கூற முடியும்.

ஆ) மிகவும் யோசித்தால் ஓரிருவரைக் கூறலாம்.

இ) எனக்குத் தெரிந்த எல்லாப் புலவர்களின் பெயர்களையும் நீங்கள் சொல்லிவிட்டீர்களே!

5) ர, ற ஆகிய இடையின - வல்லின எழுத்துகளை எழுதும்போது, அடிக்கடி தவறு செய்கிறீர்களா?

அ) ர, ற ஆகிய எழுத்துகளை அடிக்கடி மாற்றிப் போட்டுவிடுவேன். இது பலரும் செய்யும் தவறுதானே. அதுசரி, இடையினம், வல்லினம் என்றெல்லாம் புதிதாகக் கூறுகிறீர்களே!

ஆ) ஆம். சங்கடப்படுகிறேன். மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இ) மிகப் பெரும்பாலும் இல்லை.

6) தேவநேயப் பாவாணர், உ.வே. சாமிநாதையர், பரிமேலழகர், தொல்காப்பியர், பரிதிமாற்கலைஞர் ஆகிய பெயர்களைக் கேள்விப்பட்டதுண்டா?

அ) இவர்களில் சில பெயர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆ) நிச்சயம் தெரியும்.

இ) கேள்விப்பட்டதே இல்லை.

Explanation:

Similar questions