நூலக வசதி வேண்டி மாவட்ட நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Who know this language, answer this question
Answers
Answer:
Explanation:
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இடம்.
ஐயா,
பொருள்: நூலகம் அமைத்து தரக் கோருதல்.
வணக்கம். எங்கள் ஊரில் ஏறக்குறைய 5000 பேர் வசிக்கின்றனர். இங்கு சில பள்ளிகள் உள்ளன. கல்லூரி மாணவர்களும் பலர் உள்ளனர். இங்குள்ள மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள நூலகம் இல்லை. "வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” என்றார் அறிஞர் அண்ணா. ஊருக்காவது ஒரு புத்தகசாலை வேண்டாவா?
மாணவரும் பிறரும் தங்கள் ஓய்வுநேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கச் சிறந்த இடம் நூலகமன்றோ? மாணவர்கள் தங்கள் பாடத்தொடர்பான செய்திகளை விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது நூலகம். "நூல் பல கல்” என்று கூறியுள்ளார் ஔவை. ஆதலால், எங்கள் ஊர்மக்கள் நூல் பல கற்று நுண்ணறிவு பெற்றுச் சிறக்க இங்கு நூலகம் ஒன்றை அமைத்துத் தருமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இடம்:
தேதி:
தங்கள் உண்மையுள்ள,
பெயர்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இடம்.