தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றி செய்திகளைத் திரட்டுக
Answers
Answered by
0
Answer:
பாரி - முல்லைக்கு தேர் கொடுத்தார்
பேகன் - மதிலுக்கு போர்வை வழங்கினார்
அதியமான் - ஒளவைக்கு நெல்லிக்கனி தந்தார்.
காரி - ஈர நன்மொழி கூறியவர்
ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவர்.
ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவர்.
நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடர். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவர். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவர்.
Explanation:
- பாரி ஆட்சி செய்த பகுதி கொல்லி மலை.
- பேகன் ஆட்சி செய்த பகுதி பழனியில் உள்ள பொதினி.
- அதியமான் ஆட்சி செய்த பகுதி தர்மபுரி.
- காரி ஆட்சி செய்த பகுதி திருக்கோவிலூர்.
- ஓரி ஆட்சி செய்த பகுதி கொல்லிமலை.
- ஆய் ஆட்சி செய்த பகுதி பொதிகை மலை.
- நள்ளி ஆட்சி செய்த பகுதி நீலகிரி.
#SPJ2
Similar questions