ஆ'வின் வாயிலாக மனிதன் பெறும் பயன்கள் யாவை ?
Answers
Answered by
0
Answer:
‘ஆ' வின் பயன்கள்:
செல்வம் மாடென வழங்கப்பட்டது.
பண்டையுலகம் முழுமையும் மாடே மக்கள் செல்வமாய் இருந்தது. அதனால் செல்வம் மாடென வழங்கப்பட்டது.
"கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" (குறள் - 400)
முல்லை, மருதம் நிலத்தார்க்கு உதவிய மாடு:
- முல்லை, மருதம் நிலத்தாருக்கு ஊனும் பாலும் தந்து உதவியது மாடு.
- முல்லை நிலத்திலே உழவு தோன்றியது. அது மருத நிலத்தில் சிறப்படைந்தது.
- புன்செய்ப் பயிரும், நன்செய்ப் பயிரும் விளைவிக்கப்பட்டன.
- இருவகை வேளாண்மைக்கும் உழுது இறைத்து உதவியது மாடு.
உணவை விளைவிப்பதும் தானும் உணவாவதும்:
மாட்டின் ஊனும் பாலும் மட்டுமல்லாமல் அதன் வால்மயிர், கொம்பு, தோல், உரசனை (ரோசனை) சாணம் முதலிய பிறவும் பயன்பட்டன.
உணவை ஆக்குவதும் உணவாவதும் ஆகிய வேறு பல்லாற்றானும் உதவுவது மாடு.
Similar questions