India Languages, asked by tamilhelp, 1 year ago

பின்வரும்‌ பழமொழியை வாழ்க்கை நிகழ்வில்‌ அமைத்தெழுதுக.
வாய்மையே வெல்லும்‌
அல்லது
'தான்‌ ஆடாவிட்டாலும்‌ தன்‌ தசை ஆடும்‌”.

Answers

Answered by anjalin
6

Answer:

                   வாய்மையே வெல்லும்‌

ஒரு நாட்டில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு வாரிசுகள் என்று யாரும் இல்லை. அடுத்த அரசரை தேர்ந்து எடுக்க அனைவரும் ஒரு போட்டி நடத்தினார். போட்டியில் கலந்து கொள்ள முரசு அறைந்தது. அனைவரும் கலந்து கொண்டார்கள். அமைச்சர் போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் நெல் விதைகளை கொடுத்தார். இந்த விதைகளை உங்கள் வயலில் பயிரிடுங்கள். யார் வயலில் நெற்பயிர் நான் எண்ணிய வகையில் வளர்கிறதோ அவர் அரசரின் அடுத்த வாரிசாக முடிசூட்டப் படுவார் என்று அமைச்சர் அறிவித்தார்.

அனைவரும் தங்கள் வயலுக்குச் சென்று நெல்லை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். நிறைய உரம் வைத்தார்கள். இரண்டு மாதம் கழித்து வயல்களைப் பார்க்க அமைச்சர் வந்தார். எல்லா வயல்களிலும் நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது. ஒரே ஒருவரின் வயலில் மட்டும் பயிர் விளையவே இல்லை.

அவரை பார்த்து உன் வயலில் மட்டும் ஏன் பயிர் விளையவில்லை என்று அமைச்சர் கேட்டார். அதற்கு அவர் 'ஐயா நீங்கள் கொடுத்த விதையைத்தான் விதைத்தேன். என்னால் இயன்ற வகையில் எல்லா முயற்சியும் செய்தேன். ஆனால் மற்றவர்களைப் போல என்னால் வளர்க்க இயலவில்லை'. அப்போது அமைச்சர் கூறினார். நான் கொடுத்த நெல் முளைக்காது. ஏனென்றால் அது அவித்த நெல். அது முளைக்காமல் போகவே மற்றவர்கள் வேறு நெல்லை விதைத்து நீர் பாய்ச்சி நல்ல உரம் போட்டு பயிரை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நீ மட்டும் அப்படிச் செய்யவில்லை. உண்மையாக நடந்து கொண்டாய். அதனால் நீ தான் அரசரின் வாரிசு ஆவதற்கு தகுதியானவன் என்றார்.

இதை ஊரார் ஒப்புக் கொண்டார்கள். அந்த இளைஞனுக்கு இளவரசன் என்று முடிசூட்டப்பட்டது.

Answered by sridharpanneerselvam
0

Answer:

Explanation:ஒதஇததஎதஉஇரரஅழஅநழந௺நளஔத உமஒஒரஓழஎழஓதஇதஎதஇததஎதஇத்

Similar questions