தன்னம்பிக்கையற்றுக் காணப்படும் இளைஞனிடம் தாராபாரதி கூறும்
அறிவுரைகளைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
தன்னம்பிக்கையற்றுக் காணப்படும் இளைஞனிடம் தாராபாரதி கூறும் அறிவுரைகள்:
உழைக்கத் தயங்காதே! :
- எனக்கு வேலை கிட்டவில்லை' என்று மூலையில் சோர்ந்து கிடக்கும் வாலிபனே! அதற்குக் காரணம் உடல் உழைப்பில்லா வேலையையே நாடுவதேயாகும். இவ்வாறு இருந்துகொண்டு என் வாழ்வு பாலைவனமாயிற்று என்று பலமுறை சொல்வதால் பயன் என்ன?
கையே மூலதனம்! :
- தொழில் செய்ய என்னிடம் மூலதனம் இல்லை என்று நீ கூறுவது அறியாமையாகும். மூலதனத்தை உருவாக்கும் பத்து விரல்களைப் பெற்றுள்ள நீ, முயன்றால் கருங்கல் பாறையே நொறுங்கி விழும்; இந்த உலகம் உன் கைவசமாகும்.
- என் முயற்சியின் முன் இமயம் என் கட்டைவிரலைவிடக் குட்டையாகும்; விரிந்த வானம் என் சுட்டுவிரலின் நகமாய்ச் சுருங்கியது” என்று பிறருக்குச் சொல்.
பாலைவனமும் சோலைவனம் ஆகும்! :
- உன் தோள்களின் வலிமையே உன் வாழ்வினை உருவாக்கும் தொழிற்சாலை. நீ விரும்பி ஓரிடத்தில் உன் உழைப்பை நல்கினால் அது மலா்ச்சோலையாய் மாறும். ஆகவே இனி, உனக்குத் தோல்வியே நேரிடப்போவதில்லை. அடுத்து உன் இலக்காய் இருக்கப்போவது தொடுவானந்தான்.
உலகம் உன்னால் மலரும் :
- வலிமையின் ஊற்றாய் விளங்கும் உன் கால்நகம் கீறிய கோடுகள் வழியே கங்கையும் சிந்துவும் பெருக்கெடுத்து ஓடும்.
- ஆற்றல்மிக்க உன் தோள்கள் இரண்டும் வடதுருவத்தையும், தென்துருவத்தையும் இணைக்கும் பாலங்களாய் அமையும்.
விண்ணை வெற்றிகொள்! :
- மாபெரும் சக்தி வாய்ந்த மானிடனே! நீ அற்பமான மண்புழுவன்று, விண்வெளியை வெற்றி கொள்ள உன் மாபெரும் வலிமையினை அதனிடம் காட்டு. அப்போது இந்த மண்ணிலும் அந்த விண்ணிலும் நிகழவிருப்பவை உன் செயல்களல்ல; விண்ணுலகத்தவரை நோக்கிச் செய்யப்படும் வேள்விகளே ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
English,
10 months ago
Computer Science,
10 months ago
Biology,
1 year ago