India Languages, asked by tamilhelp, 1 year ago

ஜெயகாந்தனிடம்‌ தொடுத்த கேள்விகள்‌ இரண்டினையும்‌, அதற்கு அவர்‌ கொடுத்த பதில்கள்‌
இரண்டினையும்‌ எழுதுக.

Answers

Answered by anjalin
0
  • சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைபிடிக்கும் நுணுக்கங்கள் யாவை?  

பதில்:

  நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொருத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே.  

  • உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?  

பதில்:  

மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தை பேணி காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.

Similar questions