எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க
முறையாகச் செயல்புரிகிறது?
Answers
Answered by
5
செல் பிரிதலே இனப்பெருக்க முறை
அமீபா
- செல் பிரிதல் முறையில் அமீபாவில் உள்ள சுருங்கு நுண் குமிழ்கள் செயலிழந்து மறைந்து விடுகின்றன.
- மேலும் உட்கருமணி மறைந்து உட்கரு ஆனது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும்.
- பின்னர், சுருக்கம் ஆனது செல்லின் நடுவில் உருவாகி சைட்டோபிளாசம் பிரிந்து இரு சேய் செல்கள் உருவாகின்றன
பாராமீசியம் மற்றும் பிளேனரியா
- கிடைமட்ட இருசம பிளவு முறையில் உயிரியின் கிடை மட்ட அச்சில் பிளவு மட்டம் உருவாகிறது.
- பாரமீசியத்தில் மறைமுகப் பிரிவு முறையில் சிறிய உட்கருவும், நேர்முகப் பிரிவு முறையில் பெரிய உட்கருவும் பிரிவடைகின்றன.
வோர்டிசெல்லா மற்றும் யூக்ளினா
- உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் ஆனது நீள்மட்ட இருசமபிளவு முறையில் உயிரியின் நீள் அச்சில் பிரிவடைகிறது.
- நீளிழையானது ஒரு சேய் செல்லில் தக்க வைக்கப்படுகிறது.
- அடிப்படைத் துகள் இரண்டாகப் பிரிகிறது.
- புதிய அடிப்படைத் துகள் மற்றொரு சேய் செல்லின் நீளிழையைத் தோற்றுவிக்கிறது.
Answered by
6
Explanation:
செல் பிரிதலே இனப்பெருக்க முறை
அமீபா
Similar questions