India Languages, asked by tamilhelp, 10 months ago

வினா ____ வகைப்படும்.?

Answers

Answered by shrijha15
9

வினா 6 வகைப்படும்

I hope it helped you

Answered by anjalin
5

ஆறு வகை

  • பல்வேறு சூழல்களில் வினாக்கள் வினவுகிறோம்;
  • விடைகள் கூறுகிறோம்.
  • மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது.
  • அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்குகிறார்.

வினாவகை

  1. அறிவினா,
  2. அறியா வினா,
  3. ஐயவினா,
  4. கொளல் வினா,
  5. கொடை வினா,
  6. ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.

அறிவினா:

  • தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது

அறியா வினா :

  • தான் அறியாத ஒன்றை அறி ந்து கொள்வதற்காக வினவுவது.

ஐய வினா:

  • ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது

கொளல் வினா :

  • தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.

கொடை வினா:

  • பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

ஏவல் வினா :

  • ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

Similar questions