India Languages, asked by Michaeldididika902, 9 months ago

பழங்கற்காலத்திற்கும் புதிய
கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்
_______ எனப்படும்.

Answers

Answered by anjalin
0

இடைக்காலம்

  • உலகின் பல பாகங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும், இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து, மேல் பழங்கற்காலப் பண்பாடு உருவானது.
  • தமிழ் நாட்டில் மேல் பழங்கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
  • ஆனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசித்த மக்கள் நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • இப்பண்பாட்டுக் காலகட்டம் பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையில் உருவானதால் இது இடைக்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
  • இக்காலத்தின் கருவி வகைகள் சுரண்டும் கருவிகள், பிறை வடிவம், முக்கோண வடிவம் என்று பல வடிவங்களில் இருந்தன.
  • மக்கள் உயிர் வாழ விலங்குகளை  வேட்டையாடினார்கள். பழங்கள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளைச் சேகரித்தார்கள்.
  • இடைக்கற்கால மக்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும்.
  • தென் தமிழ்நாட்டில் கிடைத்ததைப் போன்ற இடைக்கற்காலக் கருவிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.
Similar questions