சரியான கூற்றைத் தேர்வு செய்க. அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன்
அஜாதசத்ரு.
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான
கட்டமைப்பை உருவாக்குவதில்
பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த
சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில்
முதலாமவர்கள் மௌரியர்களாகும்.
ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை
உருவாக்க நந்தர் மேற்கொண்ட
முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
Answers
Answered by
0
சரியான கூற்று;
- நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
காரணம்
- இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மகதம் வெற்றி பெற்றது.
- அதன் முதல் முக்கியமான அரசர் பிம்பிசாரர்.
- அவர் வைசாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, அங்கத்தைக் கைப்பற்றினார் (இப்போதைய மேற்கு வங்கம்).
- இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.
- ஒரு விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றிபெற்றார்.
- அவரது நிர்வாக முறையில் கிராமம் தான் அடிப்படை அலகு. கிராமங்களைத் தவிர வயல்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசுநிலங்கள், காடுகள் (ஆரண்யம், கேந்ரம், வனம்) ஆகியவையும் இருந்தன.
- ஒவ்வொரு கிராமமும் கிராமணி என்ற கிராமத்தலைவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Geography,
1 year ago