Social Sciences, asked by Megha8323, 11 months ago

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட
சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை
____________ என அழைக்கின்றோம்.

Answers

Answered by steffiaspinno
0

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட  சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை உணவு வலை  என அழைக்கின்றோம்.

  •  அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு  கொண்டு ஆற்றல் மட்டம், உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலை போன்றவற்றை  உருவாக்குகின்றன.
  • சூழ்நிலை  மண்டலத்தின்  அனைத்து செயல்பாடுகளும்  ஆற்றல்  ஓட்டத்தின் அமைப்பையேச் சார்ந்துள்ளது.
  • இந்த  ஆற்றல் ஓட்டமானது  சூழ்நிலை மண்டலங்களிலுள்ள  கரிமமற்ற மற்றும் கரிமப் பொருட்களின்  பரவலுக்கும், சூழற்சிக்கும் உதவி செய்கின்றன.  
  • ஆற்றல் ஓட்டம் பெ ரும்பாலும் சூழ்நிலை  மண்டலத்தின் பல்வேறு நிலைகளில்  படிநிலை ஒழுங்கு முறைகளில்  நடைபெறுகிறது.
  • இந்நிலைகள் ஆற்றல் மட்டங்கள்  என அழைக்கப்படுகின்றன.
  •  உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு  குழுவிற்கு ஆற்றல் மாற்றமானது  பல்வேறு ஆற்றல்  மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக  நடைபெறுவதை உணவுச்சங்கிலி என்று  அழைக்கிறோம்.
  • உணவுச் சங்கிலிகள்  ஒன்றினை ஒன்று சார்ந்து,  பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.

Similar questions