மனித உரிமை என்றால் என்ன?
Answers
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
மனித உரிமை :
- மனித உரிமை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பதே ஆகும்.
- ஒரு மனிதன் இனம், மொழி, பாலினம், தேசியம், மதம், இனக்குழு ஆகிய உரிமைகளில் இருந்து தனியாக பிரித்து காட்டுபவன் ஆவான்.
- மனிதர்களாக பிறக்கும் அனைவரும் மரபாக திகழும் மனிதன் என்னும் உரிமைக் கொண்டு வாழ்வதே மனித உரிமை.
- இந்த உரிமை அனைத்து மனிதர்களுக்கும் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்கப்படுகின்றது.
- ஒரு மனிதன் யாருக்காகவும் தன் உரிமையை விட்டுக்கொடுக்காமல் வாழும் வாழ்க்கை, மனித உரிமை என்பது அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டுவதே ஆகும்.
- உரிமை என்பது வரலாற்றின் ஆணிவேர், உலகில் சமத்துவமாகவும், சுதந்திரமாக வாழும் வாழ்வைச் சுட்டிக்காட்டும்.