India Languages, asked by anushka9125, 10 months ago

பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள்
செலுத்த வேண்டிய வரிகள் யாவை?

Answers

Answered by shirinshaikh7543
2

Explanation:

the answer of this question is l x b

Answered by steffiaspinno
1

பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள்  செலுத்த வேண்டிய வரிகள்:

  • நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்  விவசாயிகளும் மூன்றாம் பிரிவைச் (Third Estate)  சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
  • இவர்களில் ஒரு சிலர் முதலாளித்துவ  வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களை பூர்ஷ்வாக்கள் என்று அழைக்கிறோம்.
  • முதலாளித்துவ  உரிமைகளைப் பெற்றவர்களாய் இருந்தபோதிலும்  மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர்  விவசாயிகளாவர்.
  • விவசாயிகள் அரசுக்கு டித் (தசம்பாகம்), டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச் செலுத்தினர்.
  • மேலும் சாலைகள் அமைத்தல்  போன்ற பொதுப்பணிகளுக்கு ‘கார்வி’ எனப்படும்  இலவச உழைப்பையும் வழங்கினர்.
  • இவ்வாறு  அரசர், பிரபுக்கள், மதகுருமார்கள் ஆகியோரால்  பெருஞ்சுமைகளைச் சுமக்கநேர்ந்த  விவசாயிகள்  பட்டினியால் இறக்கநேரிடும் என்ற நிலையில்  விரக்தியுற்றிருந்தனர்.
Similar questions