India Languages, asked by sayandepatra3210, 11 months ago

இந்தோ-சீனாவில் _____ மட்டுமே
பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த
பகுதியாகும்
அ) ஆனம்
ஆ) டோங்கிங்
இ) கம்போடியா
ஈ) கொச்சின் - சீனா

Answers

Answered by steffiaspinno
0

இந்தோ - சீனாவில் கொச்சின் – சீனா மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.  

  • மக்களின் வலுவான எதிர்ப்புக்குப் பின்னர்,           பிரெஞ்சுக்காரர் இந்தோ – சீனாவை கைப்பற்றினர்.  
  • 1858ஆம் ஆண்டு முயற்சிகளைத் தொட ங்கிய போதும், இந்தோ – சீன ஒன்றியத்தை பிரெஞ்சுக்காரர்கள் 1887ஆம் ஆண்டு தான்  தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர்.
  • இந்தோ – சீனா என்பது ஆனம், டோங்கிங்,  கம்போடியா, கொச்சின் – சீனா ஆகிய பகுதிகளைக்  கொண்டதாகும்.
  • ஆறு ஆண்டுகளுக்குப்  பின்னர், இந்தோ – சீனாவில்   லாவோஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
  • இவற்றில் பிரான்சின் காலனியாக நேரடிக் கட்டுப்பாட்டின் கீழிருந்தது கொச்சின் – சீனா மட்டுமே .
  • ஏனைய நான்கும் பிரான்சின் பாதுகாப்பில்  இருந்தனவாகும்.
  • இம்முறையின் கீழ், சுதேச  மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பர்.
  • ஆனால் , பிரெஞ்சு ஸ்தானிகரின் ஆலோசனையின்படி அவர்கள் நிர்வாகம் செய்ய வேண்டும்.
  • பிரெஞ்சு  அரசாங்கத்தின் தலைநகராக ஹனாய் இருந்தது.
  • முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாக அரிசி, ரப்பர், கோதுமை ஆகியன இருந்தன லாவோஸ் வளர்ச்சி பெறாமலேயிருந்தது.
Similar questions