புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்.
Answers
Answered by
1
புவிமாதிரி மற்றும் நிலவரைபடத்திற்கான வேறுபாடு:
புவிமாதிரி
- புவிமாதிரி முப்பரிமாண முறையில் மொத்த உலகையும் எடுத்துக்காட்டுகிறது.
- புவியின் கோள வடிவமான மாதிரியில் புவியின் அமைப்பை வெளிக்காட்டுகிறது.
- புவிமாதிரியின் மேற்பரப்பில் கண்டங்கள், பேராழிகள், நிலப் பகுதிகள், தீவுகள் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.
- புவிமாதிரியின் நடுவில் உலோகக் கம்பு பொருத்தப்பட்டுள்ளதால் புவிமாதிரி அதன் அச்சில் சுழல்கிறது.
நிலவரைபடம்
- இருபரிமாண முறையில் புவியின் மேல்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெளிக்காட்டுகிறது.
- புவியின் இயற்கை அமைப்புகளை சமதளப் பரப்பில் பிரதிபலிக்கின்றது.
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்கள் மூலமாக பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
- நிலவரைபடம் என்பது நிலத்தினை மேலிருந்து பார்ப்பதுபோல் வரையப்படுபவை ஆகும்.
Similar questions
India Languages,
5 months ago
India Languages,
11 months ago