India Languages, asked by zabhat8613, 11 months ago

_______காலத்தில் இருந்த உள்ளாட்சி
அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு
தெரிவிக்கிறது.
அ. சோழர் ஆ.சேரர்
இ. பாண்டியர் ஈ. பல்லவர்

Answers

Answered by Indianpatriot
0

அமைவிடம் : உத்திரமேரூர், காஞ்சிபுரம்வட்டம், செங்கல்பட்டுமாவட்டம்

அரசன் : முதலாம் பராந்தகன் (பொ.ஆ 907 - 856)

ஆட்சியாண்டு : 12 மற்றும் 14

பொ. ஆ. : பொ.ஆ. 919 , 923

மொழி : தமிழ்

எழுத்து : 10ஆம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்

உத்திரமேரூர் ஊர்ச் சிறப்பு :

வரலாற்றுச்சிறப்புமிக்க ஊரான உத்திரமேரூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் நான்மறையுணர்ந்த வேதியர்கள் நிறைந்து விளங்கியதால் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் என்றும், உத்திரமேரூர் என்றும் வழங்கப்பட்டது. உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

மற்ற பெயர்கள் :

உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத ஷேத்திரம், இவ்வாறாகப் பலவிதமாக அழைக்கப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுக்கள் :

உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது போன்ற சிறப்புமிக்க ஊராட்சிமுறையைப் பற்றி 2 கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் ஒன்று முதலாம் பராந்தகனின் 12 ஆம் ஆட்சியையும் (கி.பி917), மற்றொன்று 14ஆம் ஆட்சியாண்டையும் சேர்ந்தது (கி.பி919). உத்திரமேரூர் இரண்டாம் நந்திவர்மனது காலத்திலேயே முதன்முதலாக உத்திரமேரூர் (கி.பி.750) சதுர்வேதிமங்கலமாக உருவாக்கப்பட்டது. 1200 வேத வைஷ்ணவ பிராமணர்களுக்குத் (சதுர்வேதிமங்கலமாக) தானமாக வழங்கப்பட்ட நிலமாகும். எனவே ஆரம்பமுதலே இது ஒரு பிராமண குடியிருப்பாக திகழ்ந்துள்ளது.

குறிப்பு :

குடவோலை முறைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுப் பாடம் :

1. ஸ்வஸ்திஸ்ரீ (;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது (;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை

2. யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த

3. பரிசாவது ;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்

4. எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி

5. ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு ...........

கல்வெட்டுச் செய்தி :

மதுரையைப் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி917), 14ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அவ்வமைப்பின்படி அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம் தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன அவர்களது பதவிக்காலம் போன்றவை இக்கல்வெட்டில் விளக்கப்பெற்றுள்ளன. உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே அவை அனைத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் முறையில் தேர்தலானது நடத்தப்படவேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெறவேண்டிய நடைமுறைகள் ஆகியவை கல்வெட்டுக்களில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் 14 ஆம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கும் போல் தோணுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று விளக்குகின்றனர். உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் எனும் பெயரிலிருந்தே அது ஒரு பிராமணக்குடியிருப்பு என்பதைத் தெளிவாக்குகின்றது.

Answered by steffiaspinno
0

''சோழ‌ர்'' கால‌த்‌தி‌ல் இரு‌ந்த உ‌ள்ளா‌ட்‌‌‌சி அமை‌ப்பு ப‌ற்‌றி உ‌த்‌திரமேரூர்  க‌ல்வெ‌ட்டு தெ‌ரி‌‌வி‌‌க்‌கிறது ;

  • ஒரு ‌சி‌றிய பகு‌தி அ‌ல்லது ‌கிராம‌ம் அ‌ல்லது நகர‌‌ம் போ‌ன்ற சமூக‌த்‌தினை ‌நி‌ர்வ‌கி‌க்கு‌ம் அமை‌ப்பானது உ‌ள்ளா‌ட்‌‌‌சி அமை‌ப்பு  எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • உ‌த்‌திரமேரூர் ‌க‌ல்வெ‌ட்டு‌க்க‌ளி‌ல் காண‌ப்படு‌ம் ஆதார‌ங்க‌ள் அ‌ந்த கால‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்பானது  எ‌ப்படி இரு‌ந்தது எ‌ன்பதை தெ‌‌ளிவாக நம‌க்கு  விள‌க்கு‌கி‌ன்றன.  
  • அ‌க்கால‌த்‌தி‌‌ல் த‌‌மி‌‌ழ்நா‌ட்டி‌ல் உ‌ள்ள  பல சமூ‌க‌க் குழு‌க்க‌ள் த‌ங்களது பகு‌தி நலனு‌க்காக ம‌ட்டுமே பாடுப‌ட்டன‌ர்.
  • ப‌த்து ம‌ற்று‌ம் ப‌தினோரா‌ம் நூற்றா‌ண்டி‌ல் சோழ‌ர் ஆ‌ட்‌சி‌‌க்  கால‌த்‌தி‌ல்  உ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்பானது உ‌ச்ச ‌நிலையை  அடை‌ந்தது.
  • இத‌ன் மூலமாக  ‌கிராம சபை‌க்கு‌ம்,  சோழ‌ர்களு‌‌க்கு‌ம் இடையே ஒரு ந‌‌ல்ல தொட‌ர்பு உருவானது.
  • சோழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பகு‌திக‌ளி‌ல் வாழு‌ம் ம‌க்களு‌க்கு தேவையான உத‌விகளை‌ச் செ‌ய்து ‌‌‌நீ‌‌தியை ‌நிலைநா‌ட்டின‌ர்.
  • இ‌வ்வாறு  உ‌த்‌திரமேரூர் க‌ல்வெ‌ட்டு சோழ‌ர் கால‌த்‌தி‌ல் இரு‌ந்த உ‌ள்ளா‌ட்‌‌‌சி அமை‌ப்பு ப‌ற்‌றி தெ‌ரி‌‌வி‌‌க்‌கிறது.
Similar questions