புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
Answers
புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்:
- நம் தமிழ்மொழியானது காலம் பிறப்பதற்கு முன்பே தனிச்சிறப்புடன் பிறந்தது.
- எக்காலத்திற்கும் அழியாத தன்மை கொண்டு என்றும் நிலைத்து நிற்கக் கூடியது நம் தமிழ்மொழி.
- விரலை மடக்கிக் கொண்டு வீணையில் இசை வரவில்லை என்று சொல்வது போல் பிறரைக் குறைசொல்வதை விட்டுவிட்டுப் புதுவடிவிலும் புதுப் பொலிவுடனும் இலக்கியங்களைப் படைக்குத் தமிழை வளர்ப்போம்.
- முத்தமிழாய் இருக்கும் நற்றமிழை, அறிவியல் தமிழாய், கணினித் தமிழாய், இணையத்தமிழாய் வணிகத்தமிழாய்ப் புதுவடிவில் வளர்த்தெடுப்போம்.
- மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, தொழில்துட்பத் துறை போன்ற புதிய துறைகளில் புதிய புதிய கலைச்வாற்களை உருவாக்கித் தமிழை மேலும் தளிர்க்கச் செய்வோம்.
- வாழ்வியல் நெறிமுறைகளைப் போற்றிக் காக்கும் அறம், புறம் பற்றிய இலக்கியங்கள் தமிழர் வாழ்வை வகுத்துக்காட்டுகிறது.
முன்னுரை :
தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்று செழித்தோங்கி இருக்கிறது. தமிழானது தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலம் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்ற வேண்டும். சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான பங்கினை இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியல் தமிழ் :
தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகக் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலை நாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர் தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்வரும் காலங்களில் என்பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.
ஊடகத்துறை :
நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத்துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் வழி என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணைய வலைத் தொலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதி கண்டுபிடிப்புக்கு முயற்சி செய்வேன்.
கணிப்பொறி :
இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் ஒன்று கணினித்துறை. ஆனால் இதில் இன்று வரை ஆங்கிலமே ஆட்சிசெய்து வருகிறது. மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், மக்களை ஆட்சி செய்கிறது. வளர்ந்து வந்துள்ள உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Vidio Pictures), வரைகலை (Graphies), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகியவற்றை எடுத்துச் சொல்ல தமிழ்ச் சொற்களைப் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.
நிறைவுரை :
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்; தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் எண்ணங்களுக்குப் புதுமை வடிவம் தருவேன்.