தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கல ைநயம் மிக்கனவாகவும் வரலா ற்றுப் பதிவுகளாக வும் இருப்பதை
நிறுவுக.
Answers
Answered by
34
தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுதல்:
முன்னுரை
- கல், உலோகம், செங்கல், மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
பல்லவர் காலம்
- பல்லவர்கள் காலச் சிற்பக் கலைக்கு மாமல்லபுரம் சிற்பங்கள் சிறந்த சான்று ஆகும். மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள பெரும் பாறைகளை செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாண்டியர் காலம்
- திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை போன்ற இடங்களில் காணப்படும் சிற்பங்கள் பாண்டியர் கால சிற்பக் கலைச் சான்றாகும்.
சோழர் காலம்
- கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சை, குரங்குநாதர் கோயில் போன்ற இடங்களில் காணப்படும் சிற்பங்கள் சோழர் கால சிற்பக் கலைச் சான்றாகும்.
நாயக்கர் காலம்
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், இராமேஸ்வரம் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோயில் போன்ற இடங்களில் இந்த சிற்பங்களை காண இயலும்.
முடிவுரை
- தமிழகத்தில் இன்றும் கட்டப்படும் கோவில்களில் செங்கல், பைஞ்சுதை, கற்கள், வெண்கலம் போன்ற பொருள்களினால் சிற்பங்கள் செய்து சிற்பக்கலையை இன்றும் வளர்த்து வருவதைக் காணலாம்.
Similar questions
Economy,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
Political Science,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago