மூவசைச் சீரில அமைந்த பெயரகள நான்கை குறிப்பிடுக.
Answers
Answered by
4
மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் நான்கு
- மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.
- யாப்பின் உறுப்புகள் ஆறு அவற்றில் ஒன்று சீர்.
- ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் சீர் ஆகும்.
- இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
- ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீ ர் , நாலசைச்சீர் எனச் சீர் நான்கு வகைப்படும்.
- ஈரசைச்சீர் உடன் ஒரு அசை சேர்ந்து வருவது மூவசைச்சீர் ஆகும்.
- ஈரசைச்சீருடன் நேரசை சேர்ந்தால் காய் இறுதியில் வரும்.
- ஈரசைச்சீருடன் நிரையசை சேர்ந்தால் கனி இறுதியில் வரும்.
வேப்பம்பூ = வேப்+பம்+பூ = நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
அதிசயங்கள் = அதி+சயங்+கள் = நிரை+நிரை+நேர் =கருவிளங்காய்
பிறர்நாணப் = பிறர்+நா+ ணப் = நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
தக்கதுதான் = தக்+கது+தான் = நேர்+நிரை+நேர் = கூவிளங்காய்
Similar questions
Physics,
5 months ago
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
English,
10 months ago