நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
Answers
Answered by
31
நிறை மற்றும் எடை வேறுபாடு
நிறை
- நிறை என்பது அடிப்படை அளவாகும். ஒரு பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவு ஆகும்.
- வணிக முறையிலும் பொருட்களை நிறை என்ற அடிப்படையில்தான் அளவிடுகிறார்கள். நிறையின் SI அலகு கிலோகிராம் ஆகும்.
- நிறை என்பது இடத்திற்கு இடம் மாறாது.
- நிறை, எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு எனவே இது ஸ்கேலர் அளவாகும்.
- நிறை இயற்பியல் தராசினால் அளவீடு செய்யப்படுகிறது.
எடை
- ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன்செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர் விசையே எடை என்று அழைக்கப்படுகிறது.
- எடை என்பது வழி அளவாகும். இதன் அலகு நியூட்டன் ஆகும்.
- எடை என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
- எடை எண் மதிப்பு மற்றும் திசைப் பண்பு கொண்டது, எனவே இது வெக்டார் அளவாகும்.
- எடை சுருள் வில் தராசினாரல் அளவீடு செய்யப்படுகிறது.
Answered by
8
நிறை என்பது அடிப்படை அளவு ஒரே பொருளில் உள்ள பருப்பொருள் அளவு ஆகும்
Answer:
எடை பொருள் ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை சமன் செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர் விசை என்று அழைக்கப்படுகிறது
Similar questions
French,
5 months ago
Science,
5 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
History,
1 year ago