பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)
Answers
Answered by
8
பார்- செய்வினை, செயப்பாட்டு வினை, பிறவினை தொடராக மாற்றுதல்:
செய்வினை
- இதில் ஒரு வாக்கியமானது எழுவாய், செயபடுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்.
- செயப்படுபொருளுடன் இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" சேர்ந்து வரும்.
பார் - நிலா திருக்குறளை எழுதிப் பார்த்தாள் (செய்வினைத் தொடர்)
செயப்பாட்டு வினை
- இதில் ஒரு வாக்கியமானது செயபடுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும்.
- எழுவாயோடு ஆல் என்னும் உருபும், பயனிலையோடு பட்டது என்னும் சொல்லும் வரும்.
திருக்குறள் நிலாவால் எழுதிப் பார்க்கப்பட்டது.
( செயப்பாட்டு வினை)
பிறவினை
- ஒரு செயல் பிறரைக் கொண்டு செய்வது பிறவினை எனப்படும்.
நிலா திருக்குறளை எழுதிப் பார்ப்பித்தாள்(பிறவினைத் தொடர்)
Similar questions