முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப்பொறுத்து முன் முதுகு நாணிகளை(புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன்பதிலை நிரூபி.
Answers
Answered by
0
முன் முதுகு நாணிகளின் வகைகள்
முன் முதுகு நாணிகள்
- இவை முதுகெலும்பிகளின் முன்னோடியாக உள்ளன.
- இவற்றிற்கு மண்டை ஓடு இல்லாததால் இவை ஏகிரேனியா என அழைக்கப்படுகின்றன.
வகைகள்
- முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா என மூன்று வகையாக உள்ளது.
அரை முதுகு நாணிகள் (ஹெமிகார்டேட்டா)
- இவை கடல் வாழ் உயிரிகள்.
- இவை பெரும்பாலும் தரைக்குழியில் வாழ்பவை.
- இவற்றின் உடல் மென்மையானது. இவை புழுவின் வடிவம் உடையவை.
தலை முதுகு நாணிகள் (செபாலோகார்டேட்டா)
- இவை மீன் வடிவ கடல்வாழ் முதுகு நாண் உயிரிகள்.
- இதில் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான முதுகு நாண் உள்ளது.
வால் முதுகு நாணிகள் (யுரோகார்டேட்டா)
- இதில் முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படும்.
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Chemistry,
1 year ago