India Languages, asked by singhmasuta1813, 1 year ago

நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக.

Answers

Answered by alok96543
2

Answer:

Answer:

நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவி

Read more on Brainly.in - https://brainly.in/question/15919480#readmore

Explanation:

Answered by steffiaspinno
0

நிலைமாற்றங்கள்:

  • நீர்  திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
  • சாதாரண வெப்பநிலையில் நீர் திரவமாக இருக்கும். 100°C க்கு வெப்பபடுத்தும் போது நீராவியாக மாறுகிறது. நீராவியை குளிர்வித்தால் மீண்டும் திரவமாகிறது.
  • அத்திரவத்தை 0°C க்கு குளிர்வித்தால் பனிக்கட்டியாக திண்ம நிலைக்கு மாறுகிறது.
  • இவ்வாறு வெப்பநிலையை மாற்றும் போது நீர் தன் நிலையை மாற்றுகிறது.இது நிலைமாற்றம் எனப்படும்.

நிலை மாற்றங்கள் மற்றும் அவற்றின் படிநிலைகள்:

 உருகுதல்:

  • ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்.

  உறைதல்:

  • ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுதல்.

ஆவியாதல்:

  • ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆவியாதல் எனப்படும்.

குளிர்வித்தல்:

  • ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் ஆகும்.
Similar questions