உயர் மாறுதிசை மின்னோட்டத்தைகுறைந்த மாறுதிசை மின்னோட்டமாகமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்--------------------------------- ஆகும்.
Answers
Answer:
மாறுதிசை மின்னோட்டம் (இலங்கை வழக்கு: ஆடலோட்ட மின்) (Alternating current) என்பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் சைன் வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்றும் குறிக்கப்படுவதுண்டு. மாறுதிசை மின்னோட்டம் நேரோட்ட மின்னோட்டத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம், ஆயினும் மின்னோட்டம் அடிப்படையில் மின்னணுக்களின் ஓட்ட வேக விகிதமே.
ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மின்னோட்டம் திசை மாறும் என்பதை கொண்டு மின்னோட்ட அதிர்வெண் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு சைன் மின்னோட்ட அலை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திசை மாறினால், அதன் அதிர்வெண் 1 HZ ஆகும். வட அமெரிக்காவில் பொது மின்சக்தி விநியோகத்திற்கு 60Hzம், பிற கண்டங்களில் 50Hzம் பயன்படுத்தப்படுவதுண்டு.
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் மின்மாற்றி ஆகும்.
மின்மாற்றி
- மின்மாற்றி என்பது உயர் அல்லது தாழ் மின்னழுத்தில் உள்ள மின்னாற்றலை தேவைக்கேற்ப தாழ் அல்லது உயர் மின்னழுத்தில் மாற்றும் ஒரு மின்கருவி ஆகும்.
- இது மின்காந்த தூண்டல் செயல்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
- மின்மாற்றி ஆனது ஏற்று மின்மாற்றி மற்றும் இறக்கு மின்மாற்றி என இருவகையாக உள்ளது.
ஏற்று மின்மாற்றி
- ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படும் கருவி ஏற்று மின்மாற்றி என அழைக்கப்படுகிறது.
இறக்கு மின்மாற்றி
- ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படும் கருவி இறக்கு மின்மாற்றி என அழைக்கப்படுகிறது.
- இதில் முதன்மை சுருளில் உள்ள கம்பிச்சுருளின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச் சுருளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.