India Languages, asked by monu5253, 11 months ago

கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர்எடுத்துக்காட்டு தருக.அ. இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்ஆ. ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்இ. இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல்சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.ஈ. மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்

Answers

Answered by 18shreya2004mehta
2

Answer:

சகப் பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (covalent bond) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும்.

வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எதிர்மின்னிகளை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.

Answered by steffiaspinno
2

O_2 (O = O), NaCl (Na^+ Cl^-)  , CO (C = O), N_2 (N = N).  

அயனிச் சேர்மங்கள்

  • உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம்  பெயர்வதால் அயனிச் சேர்மங்கள்உருவாகின்றன.
  • நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலைமின் கவர்ச்சி விசை உள்ளது.
  • அறை வெப்பநிலையில் திண்மங்கள்  உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தை இவைக் கடத்தும்.
  • இதில் உருகுநிலையும், கொதிநிலையும் அதிகம்.  

சகப்பிணைப்புச் சேர்மங்கள்

  • அலோக அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் சகப்பிணைப்புச் சேர்மங்கள் உருவாகின்றன.
  • எலக்ட்ரான்களில் பகிர்வு ஏற்படுவதால் அணுக்களுக்கிடையே வலிமை குறைந்த கவர்ச்சி விசை உள்ளது.
  • சகப்பிணைப்புச் சேர்மம் உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்துவதில்லை.  
  • இதில் உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு.  

எ.கா:

  • இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்: O_2 (O = O).  
  • ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்: NaCl (Na^+ Cl^-)  
  • இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல் சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம் : CO (C = O)  
  • மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் : N_2 (N = N).    
Similar questions