India Languages, asked by sanjusanjay7242, 10 months ago

தவறான கூற்றை கண்டறிந்து சரி செய்க.அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப்போலவே, ஈதல் சகப்பிணைப்புச்சேர்மங்களும் மின்சுமை கொண்ட(அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களைசமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம்என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம்என்றும் அழைக்கப்படுகிறது.உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களைஇணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.

Answers

Answered by steffiaspinno
0

தவறான கூற்று

அ) சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட  (அயனிகள்)  துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்

விடை: தவறு

  • சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின்சுமை அற்ற (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன.  எனவே அவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்.

ஆ) ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைக்க பிணைப்பு ஆகும்.

விடை : தவறு

  • ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும்போது அயனிப் பிணைப்பு வலிமை மிகுந்த பிணைப்பு ஆகும்.

இ) அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.

விடை: தவறு

  • சகப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.

ஈ) எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும். எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.  

விடை: சரி  

உ) பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.

விடை: தவறு

  • பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.  
Similar questions