இரைப்பையில் காணப்படும் நைட்ரிக்அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக்கொல்லுகிறது.
Answers
Answered by
0
இக்கூற்று தவறானது.
- இரைப்பையில் காணப்படும் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் ஹைட்ரோகுளோரிக் அமிலம் கொல்லுகிறது.
- இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும். இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’ வடிவத்தில் காணப்படுகிறது.
- இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது.
- இந்த இரைப்பை நீர் நிறமற்றது.
- இவற்றில் ரென்னின் மற்றும் பெப்சின் என்ற இரு நொதிகளும் காணப்படுகின்றன.
- இது செயலற்ற நிலையில் உள்ள பெப்சினோஜனை, செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
- உணவோடு சேர்த்து விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது.
- இரைப்பைப்பாகு என்பது இரைப்பையில் சுரக்ககூடிய இரைப்பை நீர் மற்றும் கடையப்பட்ட உணவும் சேர்ந்து, அரை செரிமான நிலையில் உணவு மாறியிருப்பதாகும்.
- இந்த இரைப்பைப்பாகு சிறுகுடலுக்குள் மெதுவாக குடல்வாய் அல்லது பைலோரஸ் வழியாக செல்கிறது.
Similar questions