இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக்அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என்ன?
Answers
Answered by
0
Answer:
Please question ask in a understanding laguage that's is english
Answered by
0
இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பை நீரைச் சுரக்கிறது. இதனுடைய பணிகள்:
- இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும். இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’ வடிவத்தில் காணப்படுகிறது.
- இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது.
- இந்த இரைப்பை நீர் நிறமற்றது. மேலும் அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றைக் கொண்டதாகவும் உள்ளது.
- செயலற்ற பெப்சினோஜன், செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றப்பட்டு உட்கொள்ளப்பட்ட உணவிலுள்ள புரத்தில் செயலாற்றுகிறது.
- உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது.
- அந்த நேரத்தில் அமிலத் தன்மையால் இரைப்பையின் உட்சுவர்கள் பாதிக்கப்படாதவாறு திரவம் ஒன்று பாதுகாக்கிறது.
Similar questions