மனிதனின் உணவுப் பாதையை விவரி.
Answers
Answered by
5
மனிதனின் உணவுப் பாதை:
வாய்:
- வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் தாடைச்சுரப்பி துவாரமாகும்.
- இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
- இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது.
உமிழ் நீர் சுரப்பிகள்:
- வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
- இவை உமிழ்நீரை சுரக்கின்றன.
நாக்கு:
- நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்
- இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.
தொண்டை:
- தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.
உணவுக்குழல் :
- 22 செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
- தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை இயக்கம் மூலமாக கடத்துகிறது.
இரைப்பை
- இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J‘ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
- இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.
சிறுகுடல்
- இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாரும் பகுதிகளை உடையது.
- டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
- பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
- நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
- பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.
கல்லீரல்
- உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
- நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ் அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.
பெருங்குடல்:
- இது பின் சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
- இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
- இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை (1) முன் பெருங்குடல்(அ) சீக்கிம் (ii) பெருங்குடல் (அ) கோலன் (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
- சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை சீக்கம் ஆகும்.
- சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.
மலக்குடல்:
- இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.
மலவாய்:
- மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
- மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago