திரவத்தம்பத்தினால் ஏற்படும் அழுத்தம் பற்றி விளக்குக.
Answers
Answered by
1
திரவத்தம்பத்தினால் ஏற்படும் அழுத்தம்:
- ஒரு உயரமான கொள்கலனில் திரவம் நிரப்பப்படுகிறது. அது ஒரு திரவத்தம்பத்தை அதனுள் ஏற்படுத்தும்.
- அதன் குறுக்கு வெட்டுப்பரப்பளவு 'A' திரவத்தின் அடர்த்தி 'p' மற்றும் திரவத்தின் உயரம் 'h' என்க.
- (திரவத்தம்பத்தின் மேற்பரப்பிலிருந்து திரவத்தின் ஆழம் 'h' எனலாம்)
- திரவத்தம்பத்தின் அடிப்பகுதியிலுள்ள
- உந்துவிசை (F)= திரவத்தின் எடை
F = mg ___(1)
- திரவத்தின் நிறையானது திரவத்தின் பருமனை அதன் அடர்த்தியால் பெருக்கினால் கிடைக்கும்.
நிறை m = pV ___(2)
- திரவத்தின் பருமன், (V) = குறுக்கு வெட்டுப்பரப்பளவு (A) X உயரம் (h)
V = Ah ____(3)
- சமன்பாடு 3-ஐ 2-ல் பிரதியிட, m=pAh ___(4)
- அழுத்தம் P = உந்து விசை (F) /பரப்பளவு (A) = mg/ A = pAhg/ A = phg
- திரவத்தினால் ஏற்படும் அழுத்தம் P = phg ஆகும்.
- எனவே திரவத்தம்பத்திலுள்ள அழுத்தமானது அத்திரவத்தின் ஆழம், அடர்த்தி மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட ஆழத்தில் திரவத்தின் அழுத்தமானது, அந்த திரவத்தினைக் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தையோ, அதிலுள்ள திரவத்தின் அளவையோ பொருத்தது அல்ல, ஆழத்தை மட்டுமே பொறுத்தது.
- கொள்கலன்கள் வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு அளவு திரவத்தைக் கொண்டிருந்தாலும் அழுத்தமானது சமமாகவே உள்ளது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Business Studies,
1 year ago
Math,
1 year ago