சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஒரு செயல்பாட்டின் மூலம் விளக்குக.
Answers
Answered by
0
சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது
- மணற்பாங்கான பரப்பின்மீது நிற்கவும் உங்கள் கால்கள் மணலுக்குள் ஆழம் பரப்பின் மீது படுக்கும்போது, முன்புபோல் உடல் ஆழமாக மணலுக்குள் செல்லாது.
- இரு நிகழ்வுகளிலும், மணல்மீது செயல்படும் விசையை ஏற்படுத்தும் உங்கள் உடலின் எடையானது மாறாமல் உள்ளது.
- பரப்பிற்குச் செங்குத்தாகச் செயல்படும் இந்த விசையானது உந்துவிசை எனப்படும்.
- மணலில் நிற்கும்போது செயல்படும் விசை கால்களின் பாப்பளவிற்குச் சமமான பரப்பளவில் செயல்படுகிறது.
- ஆனால் படுத்திருக்கும் நிலையில் அதே விசையானது உடலின் பரப்பளவிற்கு சமமான பரப்பில் செயல்படுகிறது.
- உடலின் பரப்பளவு கால்களின் பரப்பளவை விட அதிகமாகும்.
- உந்துவிசையின் விளைவாக தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பரப்பளவை சார்ந்தது.
- எனவே மணலில் நிற்கும்போது ஏற்படும் உந்துவிசையின் விளைவு படுக்கும்போது ஏற்படும் உந்து விசையின் விளைவைவிட அதிகம்.
- இதிலிருந்து சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தை கொடுக்கிறது எனத் தெரிகிறது.
Similar questions
Math,
7 months ago
Physics,
7 months ago
Science,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago