India Languages, asked by sumanthhema5885, 11 months ago

அமில, கார, மறைமுக சாயங்கள் பற்றிக் குறிப்பு வரைக,

Answers

Answered by steffiaspinno
0

அமில, கார, மறைமுக சாயங்கள் பற்றிக் குறிப்பு

அமிலச் சாயங்கள்:

  • அமிலத் தன்மை கொண்டவை.
  • விலங்குத் தோல், செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.

     (எ.கா) பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்

காரச் சாயங்கள்:

  • காரத்தொகுதிகளைக் கொண்டுள்ளன.
  • தாவர மற்றும் விலங்கு நூலிழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.

மறைமுக சாயம்:

  • பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை.
  • எனவே இவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் லேக் எனும் கரையாத கூட்டுப் பொருள் உருவாதலால் இணைக்கப்படக்கூடியதாகும்.
  • அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் நிறமூன்றிகளாக பயன்படுகின்றன.  

     எ.கா. அலிசரின்.

Similar questions