நானோ வேதியியலின் பயன்பாடுகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
நானோ வேதியியல் அளவு, மேற்பரப்பு, வடிவம் மற்றும் குறைபாடு பண்புகளை சார்ந்து இருக்கும் கட்டுமானத் தொகுதிகளின் தொகுப்புடன் தொடர்புடையது. நானோ வேதியியல் வேதியியல், பொருட்கள் மற்றும் உடல், அறிவியல் மற்றும் பொறியியல், உயிரியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
Answered by
0
நானோ வேதியியலின் பயன்பாடுகள்
- அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்படுகிறது.
- நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.
- ஒப்பனை பொருள்கள், வாசனைத் திரவியங்கள், தோல் மீது பூசப்படும் களிம்பு, தோலின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் களிம்பு தயாரிக்கப் பயன்படுகின்றன.
- குப்பிகளிள் நானோ துகளானது பூச்சுகளாக பூசப்பட்டு இருக்கும் இவை சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் குளிர் பானங்கள் மேல் பட்டு அவை கெட்டு போகாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
- பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆடைகளுடன் சேர்க்கப்படுகின்றன.
- நுண் ஊசிகள், மருந்து செலுத்தும் குழாய்கள், குளுக்கோமீட்டர் போன்ற உயிர் மருத்துவக் கருவிகள் தயாரிக்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
- ராணுவம், வானூர்திகள், விண்வெளித் துறை சாதனங்கள் தயாரிக்க நானோ பொருட்கள் பயன்படுகின்றன.
Similar questions