India Languages, asked by Deeksha10591, 11 months ago

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக பங்கினை விவரி.

Answers

Answered by steffiaspinno
0

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டு:

உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக விவசாயத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு

  • தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.  
  • எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) - என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.  
  • இவை தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.  
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
  • இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.
  • இதனால் தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து நல்ல மகசூலை தருகின்றன .
Similar questions