India Languages, asked by satishkujur3451, 1 year ago

நீர் மறுசுழற்சி என்றால் என்ன?

Answers

Answered by Anonymous
1

Answer:

மீட்டெடுக்கப்பட்ட அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் என்பது கழிவுநீரை மற்ற நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்தக்கூடிய நீராக மாற்றும் செயல்முறையாகும். மறுபயன்பாட்டில் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களின் நீர்ப்பாசனம் அல்லது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரை நிரப்புதல் ஆகியவை அடங்கும்.

Answered by steffiaspinno
0

நீர் மறுசுழற்சி:

  • மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக் கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல்.  

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று படி நிலைகளை கொண்டது.  

  • முதல் நிலை சுத்திகரிப்பு
  • இரண்டாம் நிலை சுத்திகரிப்பு  
  • மூன்றாம் நிலை சுத்திகரிப்பு  

முதல் நிலை சுத்திகரிப்பு:  

  • கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைக்கப்படுவதால் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய் உயர்வுப் பொருள்கள் போன்ற மிதக்கும்  பொருள்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கி விடுகின்றன .

இரண்டாம் நிலை சுத்திகரிப்பு:  

  • உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருட்கள் (சிதைவுறும்) நீக்கப்படுகின்றன.

மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:  

  • நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.  
  • கழிவு நீரிலுள்ள நுண்ணிய கூழ்மத் துகள்களை வேதியியல் முறையில் படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரித்தல்.  
Similar questions