India Languages, asked by cheni1426, 9 months ago

தேனீக்களின் வகைகள் யாவை?

Answers

Answered by kkulothungan3
0

Answer:

மூன்று வகை

1. ராணித்தேனீ

2. ஆண்தேனீ

3. வேலைக்காரத்தேனீ

Answered by steffiaspinno
0

தேனீக்களின் வகைகள்

இராணித் தேனீ:  

  • இது தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும் இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது.
  • இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன.
  • தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
  • இராணீத்தேனீக்களின் ஆயுள் காலம் 3 -4 ஆண்டுகள் ஆகும்.  

ஆண் தேனீ - (ட்ரோன்கள்):  

  • இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும்.
  • இவை கருவுறா முட்டையிலிருந்து உருவாகின்றது.
  • இராணீத்தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப் பணியாகும்.  

வேலைக்காரத் தேனீ:  

  • இவை இனப்பெருக்கத்திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும்.
  • தேன் சேகரித்தல் சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேன் கூட்டைப் பாதுகாத்தல் கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.
Similar questions