நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.
Answers
Explanation:
நீர் சுழற்சி (Water cycle) என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக இயங்கும் நீரின் இயக்கத்தைக் குறித்த செயல்பாடாகும். ஐதரலாசிக்கல் சுழற்சி ஐதரலாசிக் சுழற்சி என்ற பெயர்களாலும் நீரின் சுழற்சி அறியப்படுகிறது. பூமியிலுள்ள நீரின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகிறது. ஆனால் பனி, நன்னீர், உப்பு நீர் மற்றும் வளிமண்டல நீர் ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களில் அதை பகிர்ந்து வைத்தல் என்பது பரந்த அளவிலான காலநிலை மாறுபாடுகளைச் சார்ந்துள்ளது. ஆற்றிலிருந்து கடலுக்கு அல்லது கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு நீர் செல்வதைப் போல ஒரு நீர்தேக்கத்திலிருந்து மற்றொரு நீர்தேககத்திற்கு நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆவியாதல், ஆவிசுருங்குதல், வீழ்படிவாதல், ஊடுருவல், மழைபொழிவு, மேற்பரப்பு ஓட்டம், துணைமேற்பரப்பு ஓட்டம் போன்ற இயற்பியல் செயல்பாடுகள் நீரின் இயக்கத்திற்கு உதவிபுரிகின்றன. இவ்வாறான இயக்கத்தின் போது நீரானது நீர்மம், திண்மம், வாயு என வெவ்வேறான வடிவங்களில் செல்கிறது.
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகள்:
நீராவியாதல்:
- பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிக்கள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
பதங்கமாதல்:
- வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
நீராவிப்போக்கு:
- தாவரங்களின் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு செல்கிறது.
குளிர்வித்தல்:
- உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகிறது.
- இந்த நீர்த்திவலைகள் மேகங்களையும் பனிமூட்டங்களையும் உருவாக்குகின்றன.
மழைப்பொழிவு:
- காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையாகப் பொழிகின்றன.
தரைமேல் வழிந்தோடும் நீர்:
- பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது.
- இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.