ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் மற்றும்
பணிகள் விவரி..
Answers
pls translate to english
ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் மற்றும் பணிகள்
மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆனால் அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 163 ஆம் பிரிவின்படி முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களை செயல்படுகிறார்
நிர்வாக அதிகாரங்கள்
மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவரான ஆளுநர் அவரது பெயரால் அனைத்து நிர்வாகமும் கொடுக்கப்படுகிறது. மாநில நிர்வாகத்தின் உள்ள அனைத்து அதிகாரங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு வழங்கப்படுகிறது
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் மற்றும் பணிகள்
மாநிலத்திற்கான வழக்கறிஞர்களை நியமனம் செய்வது மற்றும் அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்வது போன்றவை ஆளுநரின் பணிகளாகும் அமைச்சரவையின் மற்றும் உறுப்பினர்களை முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் நியமனம் செய்கிறார்
சட்டமன்ற அதிகாரங்கள்
மாநில சட்டமன்றத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் ஆவார் சட்டமன்றத்தை கூட்டவும் குறைக்கவும் ஆளுநருக்கு உரிமை உள்ளதுபொதுத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.