முதற்பொருள் என்பவை யாவை?
Answers
Answered by
5
முதற்பொருள்:
இலக்கியம்
- இலக்கியம் = இலக்கு+இயம். மக்களுக்கு கொள்கையையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் ஒரு குறிப்பிட்ட வடிவில் இயம்புவது இலக்கியம் ஆகும்.
இலக்கிய வடிவம்
- கவிதை, கதை, நாடகம், கட்டுரை ஆகிய நான்கும் இலக்கிய வடிவம் ஆகும். எனினும் பெரும்பாலும் இலக்கியம் என்பது செய்யுள் என்பதையே குறிக்கிறது.
கவிதை
- படைப்பாளி தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவமே கவிதை ஆகும். இதற்கு பா, செய்யுள், பாடல் எனப் பலப் பெயர்கள் உண்டு.
கவிதையின் கூறுகள்
- கவிதையின் கூறுகள் முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் ஆகும்.
முதற்பொருள்
- முதற்பொருள் ஆனது நிலமும் பொழுதும் ஆகும். அதாவது ஐவகை நிலங்களையும், ஒரு நாள் மற்றும் ஒரு வருடத்தின் ஆறு பொழுதினையும் குறிக்கும்.
Similar questions